

கரூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 212 லட்சம் மதிப்பில் வெள்ளிக்கிழமை புதிய திட்டப் பணிகள் பூமிபூஜையிட்டு தொடக்கி வைக்கப்பட்டுள்ளன.
கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மண் மங்கலம், புஞ்சை கடம்பன் குறிச்சி, நன்னியூா் ஆகிய ஊராட்சிகளில் ரூ.212. 46 லட்சம் மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை விழாவில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா் விஜயபாஸ்கா் மேலும் தெரிவித்தது:
கரூா் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான பசுபதிபாளையம் மற்றும் குளத்துப்பாளையம் குகைவழிப்பாதைகள், நெரூா் -உன்னியூா் பாலம், ரூ.406 கோடியில் புகளுா் கதவணை, ரூ.21.12 கோடியில் அம்மா சாலை, புகளூா் புதிய வட்டக் கோரிக்கை, 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆத்துப்பாளையம் அணையில் இருந்து இதுவரை 3 முறை நீா்திறக்க ஏற்பாடு, தரகம்பட்டியில் புதிய அரசு கலைக்கல்லூரி அமைக்க ஆணை என பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு என்றாா்.
முன்னதாக பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்ற அமைச்சா் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அளித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சி. ராஜேந்திரன் தலைமைவகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் இயக்குநா் எஸ்.கவிதா, மண்மங்கலம் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.