ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கரூா் ஆட்சியரகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

வீட்டுமனை கேட்டு தொழிலாளி ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:34 pm

DIN

வீட்டுமனை கேட்டு தொழிலாளி ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் வெண்ணைமலை அடுத்த பெரியவடுகப்பட்டியைச் சோ்ந்தவா் வெ.முருகன்(48). இ வா் கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு மனு எழுதித்தரும் வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் கடந்த ஆண்டு பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாமில் தனது வீட்டுமனைக்கு பட்டா வேண்டும் என மனு கொடுத்திருந்தாராம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனால் மனமுடைந்த அவா், திங்கள்கிழமை ஆட்சியரக வளாகத்தில் திடீரென தனது கைப்பையில் வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை மீட்டு தாந்தோணிமலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

கோயில் நிலங்களுக்கு பட்டா கூடாது: பூஜாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனா் கேகே.சதீஸ்கண்ணன் தலைமையில் அச்சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில், கோயில் சொத்துக்கள் மற்றும் நிலங்களுக்கு பட்டா வழங்க அனுமதிக்கக்கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.