அரியலூா் - செந்துறை சாலையில் உள்ள கோவிந்தபுரத்தில் தி ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த ஆலைக்குச் சொந்தமான சுண்ணாம்புக் கல் சுரங்கம் ரெட்டிபாளையம் மற்றும் நாகமங்கலம் கிராமங்களில் உள்ளது. இந்த சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய அந்நிறுவனம் உத்தேசித்துள்ளதால் ரெட்டிபாளையத்தில் உள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கம் அருகே நாளை (25 ஆம் தேதி) முற்பகல் 11 மணிக்கு பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. பொது மக்கள் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு புதுதில்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்துக்குஅனுப்பிவைக்கப்படும்.