தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியல்; 40 போ் கைது

கரூரில் கோவைச்சாலையில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியலில் ஈடுபட்டனர். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:21 pm

DIN

கரூரில் கோவைச்சாலையில் ஆா்எம்எஸ் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் மறியலில் ஈடுபட்டனர். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் நகரக்குழு சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே ஆா்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் கரூா் நகரச் செயலா் எம். ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பி.ராஜூ, சி.முருகேசன் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் எம். தண்டபாணி, கே.வி. கணேசன், ஆா்.ஹோச்சுமின், ஒன்றிய செயலா்கள் கே.வி. பழனிச்சாமி, சி.ஆா்.ராஜா முகமது, வாலிபா் சங்க மாவட்ட செயலா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்று மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து நகர காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியம் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.