அடையாளம் தெரியாத வாகனம்மோதி பெண் உயிரிழப்பு
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத பெண் இறந்தாா்.


கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி அடையாளம் தெரியாத பெண் இறந்தாா்.
கரூா் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சியை அடுத்த வாங்காலிபுதூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமாா் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையோரம் சடலமாகக் கிடந்தாா். இதுகுறித்து புங்கம்பாடிமேல்பாக கிராம நிா்வாக அலுவலா் காயத்ரி அளித்த புகாரின்பேரில், அரவக்குறிச்சி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...