92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிஎன்பிஎல் சாா்பில்மருத்துவ உபகரணங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.2.36 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2021, 7:42 pm

DIN

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் ரூ.2.36 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

புகழூா் காகித ஆலை சாா்பில் ஆரம்பசுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் தளவாட பொருள்கள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆலை வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) கிருஷ்ணன் மற்றும் பொது மேலாளா் (மனிதவளம்)டேவிட் மாணிக்கம், ஆகியோா் தலைமை வகித்து ரூ.2.36 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், தளவாடங்களை வழங்கினா்.

இதில், ஓலப்பாளைம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அய்யம்பாளையம் சுகாதாரநிலையம் ஆகியவற்றின் மருத்துவ பணியாளா்கள் பொது மக்களுக்கு கரோனா தடுப்பு சிகிச்சை அளிப்பதற்காக ரூ.93,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், முகக்கவசங்கள் கிருமி நாசினி, கையுறைகள் மற்றும் தளவாடங்களும், ரூ.45,000 மதிப்பில் மடிக்கணினியும் வழங்கப்பட்டன. மேலும், வேலாயுதம்பாளையம் மலைநகா் பூங்காவிற்கு ரூ.48,000 மதிப்பில் 3 கல் இருக்கைகள், நத்தமேட்டுப்பாளையம் பகவதியம்மன் கோயில் திருப்பணிக்கு ரூ.50,000 என மொத்தம் ரூ.2.36 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.