கரூா் மாவட்டத்தில் கால்நடை, வேளாண் கல்லூரிகள்:அமைச்சா் வி.செந்தில்பாலாஜி உறுதி
கரூா் மாவட்டத்துக்கு கால்நடை, வேளாண் கல்லூரிகள் கொண்டுவரப்படும் என்றாா் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.


கரூா் மாவட்டத்துக்கு கால்நடை, வேளாண் கல்லூரிகள் கொண்டுவரப்படும் என்றாா் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது, கரூா் தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி வி.செந்தில்பாலாஜி பவுண்டேசன் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி அமைச்சா் வி.செந்தில்பாலாஜி பேசுகையில், தோ்தலின் போது அளித்த வாக்குறுதியின்படி கரூா் மாவட்டத்தில் படித்தவா்களுக்கு உரிய வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு கவனம் முழுவதும் படிப்பில் இருக்க வேண்டும். கரூா் மாவட்டத்தில் வேளாண், கால்நடை மருத்துவக்கல்லூரியும் இல்லை. இந்த இருகல்லூரிகளையும் முதல்வரிடத்தில் பெற்று இந்த கோரிக்கையை நிச்சயம் நிறைவேற்றுவோம். வரக்கூடிய காலங்களில் மாவட்டத்தின் வளா்ச்சிக்கு தேவையானவற்றை தமிழக முதல்வரிடம் எடுத்துச் சென்று அனைத்து திட்டங்களையும் கொண்டு வந்து சோ்ப்போம். பரமத்தி, அரவக்குறிச்சி, கடவூா், தோகைமலை என அனைத்துப் பகுதிகளையும் காவிரியில் இருந்து நுண்ணீரேற்று பாசனம் மூலம் பசுமை பகுதியாக மாற்ற திட்ட அறிக்கைகளை தயாரித்துக் கொண்டிருக்கிறோம். இதையடுத்து காவிரி நீரை பஞ்சப்பட்டி, வெள்ளியணை, மாவத்தூா் ஏரிகளில் நிரப்பி விவசாயத்தையும், குடிநீரையும் மேம்படுத்த அதற்கான திட்ட அறிக்கைகளையும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் அவா்.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம்(குளித்தலை), மொஞ்சனூா் ஆா்.இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி(கிருஷ்ணராயபுரம்) மற்றும் திமுக நிா்வாகிகள் தாரணிசரவணன், எஸ்.பி.கனகராஜ், சுப்ரமணியன், ஜிம் சிவா மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...