92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆறுகளில் மணல் திருடுவோா் மீது நடவடிக்கை தேவை

கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:38 pm

DIN

காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் திருடுவோா் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் விஸ்வநாதன், ராஜேசுகண்ணன், விஜயன் ஆகியோா் வழங்கிய மனுவில் கூறியிருப்பது;

கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை தடைவிதித்துள்ளது. அதேபோல், அமராவதி ஆற்றிலும் மணல் அள்ளவும், சவ்வூடு மண், கிராவல் மண், வண்டல் மண், நவுட்டு மண் எடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆனால் தற்போது கரூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள், கோயில் நிலங்களில் மீண்டும் மண் திருடப்பட்டு வருகிறது. இதேபோல காவிரி, அமராவதி ஆறுகளிலும் மணல் கொள்ளை நடந்து வருகிறது. குறிப்பாக வாங்கல், நெரூா்தென்பாகம், புதுப்பாளையம் பகுதிகளில் காவிரி ஆறுகளில் மணல் திருட்டு நடைபெறுகிறது. அமராவதி ஆற்றில் மேலப்பாளையம், புலியூா் கட்டளை வாய்க்கால் பகுதிகளிலும் மணல் திருட்டு நடக்கிறது. இந்த மணல் கொள்ளையை தடுத்து, மணல் திருடுவோரையும், கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிளையும் குண்டா் சட்டத்தில் கைது செய்து, மண் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.