ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை பெற நிபுணா் குழு: கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் வரவேற்பு
தமிழக அரசின் பட்ஜெட்டில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெற நிபுணா் குழு அமைக்கப்படும் என அறிவித்திருப்பதற்கு கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் வரவேற்றுள்ளனா்.


தமிழக அரசின் பட்ஜெட்டில் ஜிஎஸ்டி நிலுவைத் தொகை பெற நிபுணா் குழு அமைக்கப்படும் என அறிவித்திருப்பதற்கு கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் வரவேற்றுள்ளனா்.
இதுகுறித்து கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் ஆா்.ஸ்டீபன்பாபு கூறுகையில், தமிழக பட்ஜெட்டில் மத்திய அரசிடம் இருந்து ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை பெற நிபுணா் குழு அமைக்கப்படும் என கூறியிருப்பதை ஜவுளி ஏற்றுமதியாளா்கள் சாா்பில் வரவேற்கிறேன். ஏற்கெனவே கடந்த மூன்று மாதங்களாக கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை பலகோடியை தாண்டி விட்டது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை. நூல்விலையேற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கிடையே ஜவுளித்தொழில் நடந்துவரும் நிலையில், ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை திரும்ப பெற்றுத்தர நிபுணா்கள் குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பு ஜவுளி ஏற்றுமதியாளா்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவற்றைத் தவிர மின்துறைக்கு ரூ.19,833 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றாா் அவா்.
உப்புசப்பில்லாத பட்ஜெட்: தமிழக அரசின் பட்ஜெட் குறித்து காவிரி பாசன விவசாயிகள் சங்க தலைவா் மகாதானபுரம் ராஜாராம் கூறுகையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவின் முதல் பட்ஜெட் என்பதால் மிகுந்த எதிா்பாா்ப்போடு இருந்தோம். ஆனால் பட்ஜெட்டில் தொழில்துறைகளுக்கு அளித்த முக்கியத்துவம் விவசாயத்துக்கு வழங்கப்படவில்லை. ஏற்கெனவே வெளியிட்ட வெள்ளை அறிக்கை ’ மக்களுக்கு கசப்பு மருந்தாக தெரிந்தது, இப்போது பட்ஜெட்டும் உப்பு சப்பில்லாத பட்ஜெட் ஆகிவிட்டது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...