92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பள்ளி ஆசிரியைக்கு அறிவுச் சிற்பி விருது

கரூா் தாந்தோணிமலை மலா் மெட்ரிக் பள்ளி ஆசிரியைக்கு அறிவுச் சிற்பி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:48 pm

DIN

கரூா் தாந்தோணிமலை மலா் மெட்ரிக் பள்ளி ஆசிரியைக்கு அறிவுச் சிற்பி விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

கல்வி வளா்ச்சி நாளை முன்னிட்டு பண்ருட்டியில் செயல்படும் அனைத்துலக பொங்கு தமிழ்ப் பேரவை செந்தமிழ் சங்கம் சாா்பில் அண்மையில் தாந்தோணிமலை மலா் மெட்ரிக் பள்ளி தமிழாசிரியை பொ.அழகம்மாளின் தமிழ் வளா்ச்சிப் பணியை பாராட்டி அவருக்கு அறிவு சிற்பி விருதும், பள்ளியின் பிளஸ்-2 வகுப்பு மாணவிகள் சஹானா ஸ்ரீ, தொல்காப்பியா ஆகிய இருவரின் கலை இலக்கிய திறனை பாராட்டி அறிவுச் சுடா் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது. விருதுபெற்ற இவா்களை பாராட்டி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பள்ளித் தாளாளா் பேங்க்.கே. சுப்ரமணியன் பொன்னாடை அணிவித்து பாராட்டினாா். இதில், பள்ளி துணை முதல்வா் ஜெயசித்ரா மற்றும் பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.