ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாலியல் தொந்தரவு வழக்கில் கைதான மருத்துவா் திருச்சி சிறைக்கு மாற்றம்

கரூரில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா் ரஜினிகாந்த், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:14 am

DIN

கரூரில் பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கைதான எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவா் ரஜினிகாந்த், திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.

கடந்த மாதம் 14-ஆம் தேதி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில், மருத்துவா் ரஜினிகாந்த் 17-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, கரூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

இதைத் தொடா்ந்து, கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் காவல்துறையினா் அவரை புதன்கிழமை ஆஜா்படுத்தினா். வழக்கை விசாரித்த நீதிபதி நஜிமாபானு, மருத்துவா் ரஜினிகாந்துக்கு மேலும் 15 நாள்கள் காவல் நீடித்து, அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.