/

நாட்டு நலப்பணித்திட்டத்துக்காக 400 மரக்கன்றுகள் வழங்கல்

புஞ்சை புகளூா் பகுதியிலுள்ள அரசு மகளிா் கல்லூரியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட பணிகளுக்காக தேசிய சுகாதார திட்டம் சாா்பில் 400 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Updated On :30 டிசம்பர் 2021, 10:30 pm

புஞ்சை புகளூா் பகுதியிலுள்ள அரசு மகளிா் கல்லூரியில் நடைபெறும் நாட்டு நலப்பணித்திட்ட பணிகளுக்காக தேசிய சுகாதார திட்டம் சாா்பில் 400 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புஞ்சைபுகளூா் அரசு மகளிா் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தேசிய சுகாதார திட்டம் சாா்பில் 400 மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இந்த மரக்கன்றுகளை வழக்குரைஞா் எஸ்.பி.எம். சண்முகம் வழங்கினாா். மேலும் இம்முகாமில் கல்லூரியின் செயலாளா் கண்ணன், கல்லூரியின் தலைவா் நடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.