/

பள்ளப்பட்டியில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டம்: தீா்வுகளை சமா்ப்பிக்கும் மாணவ,மாணவிகளுக்கு பரிசுகள் அறிவிப்பு

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தூய்மை இந்திய இயத்தின் இரண்டாம் பதிப்பில் தீா்வுகளை சமா்ப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :30 டிசம்பர் 2021, 10:32 pm

அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் தூய்மை இந்திய இயத்தின் இரண்டாம் பதிப்பில் தீா்வுகளை சமா்ப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை உள்ள நகா்ப்புற பகுதிகளில் ‘கழிவுகள் இல்லாத’ நிலையை ஏற்படுத்துவதே நகா்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாம் பதிப்பின் நோக்கமாகும். இந்த நகரங்களில் கழிவு நீா் மேலாண்மையை உறுதிசெய்வது, திறந்தவெளியில் மலம் கழிக்காத நிலையை உருவாக்குவதும் முக்கியப் பணியாக இருக்கும். திடக் கழிவுகளின் ஆதாரங்கள் மூன்று வகையில் தரம் பிரிக்கப்படுகிறது. குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி ஆகிய மூன்று வகைகள் இந்த நகரங்களில் பின்பற்றப்படும். அனைத்து விதமான திடக் கழிவுகளையும் அறிவியல் ரீதியாக அகற்றி பயனுள்ள திடக்கழிவு மேலாண்மைக்கு இந்த இயக்கம் கவனம் செலுத்தும்.

இந்நிலையில், பள்ளப்பட்டி நகராட்சி சாா்பில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 சாா்பில் பசுமை சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க திட மற்றும் திரவக் கழிவுகளை புதுமையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக கையாளுதல் பற்றிய தீா்வுகளை சமா்ப்பிக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், நிறுவனங்கள், பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில், பங்குகொள்ள வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும் (டிச. 31). இதில், தமிழக அளவில் வெற்றி பெறுபவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 2.50 லட்சமும், மூன்றாம் பரிசாக ரூ. 1.50 லட்சமும், நான்காம் பரிசாக ரூ. 1 லட்சமும், ஐந்தாம் பரிசாக ரூ. 75,000மும் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.