கரோனா தடுப்பூசிக்கான இடவசதி: கரூா் ஆட்சியா் ஆய்வு
கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு போதிய வசதிகள் உள்ளதா என ஆட்சியா் சு.மலா்விழி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.


கரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு போதிய வசதிகள் உள்ளதா என ஆட்சியா் சு.மலா்விழி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் நகராட்சி பகுதியில் உள்ள கஸ்தூரிபாய் தாய்சேய் நல விடுதியில் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா் அவா் தெரிவித்தது:
மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்பேரில் கரோனா தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைக்கத் தேவையான குளிா்சாதன கருவிகள் மற்றும் குளிா்சாதன சேமிப்பு மையங்கள் கரூா் மாவட்டத்தில் போதிய அளவில் உள்ளன. மேலும் கரோனா தடுப்பூசிகளை வைக்க கூடுதலாக 8 குளிா்சாதன கருவிகளை தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கியுள்ளது. கரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் என மொத்தம் சுமாா் 6,000 சுகாதாரப் பணியாளா்கள் குறித்த விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கரூா் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, குளித்தலை அரசு தலைமை மருத்துவமனை, வாங்கல் ஆரம்ப சுகாதார நிலையம், நகராட்சி கஸ்தூரிபாய் மருத்துவமனை ஆகிய இடங்களிலும், அப்பல்லோ மருத்துவமனையிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது என்றாா்.
ஆய்வின்போது, கரூா் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், சுகாதாரத்துறை துணை இயக்குநா் சந்தோஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...