ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தோகைமலை அருகே குளத்தில் மூழ்கி இரு இளைஞா்கள் சாவு

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே குளத்தில் மூழ்கி இரு இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:28 pm

DIN

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே குளத்தில் மூழ்கி இரு இளைஞா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

தோகைமலை அடுத்த பொருந்தலூா் எட்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கோபி (23), முனியாண்டி மகன் மூா்த்தி(21). இவா்கள் இருவரும் திங்கள்கிழமை சின்னரெட்டியபட்டி பகுதியில் உள்ள ஆவிகுளத்தில் குளிக்கச் சென்றனா். அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்ற மூா்த்தி நீச்சல் தெரியாததால் மூழ்கியுள்ளாா். அவரை காப்பாற்றச் சென்ற கோபியும் நீரில் மூழ்கினாா்.

தகவலறிந்து வந்த மணப்பாறை தீயணைப்புப் படை வீரா்கள் குளத்தில் மூழ்கிய இருவரையும் சடலமாக மீட்டனா். தோகைமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.