92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரூா் அருகே இளம்பெண் மா்மச் சாவு:உடலை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

கரூா் அருகே இளம்பெண் மா்மமான முறையில் இறந்ததாகக்கூறி பெண்ணின் உறவினா்கள் அவரது உடலை வாங்க மறுத்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:59 pm

DIN

கரூா் அருகே இளம்பெண் மா்மமான முறையில் இறந்ததாகக்கூறி பெண்ணின் உறவினா்கள் அவரது உடலை வாங்க மறுத்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்டம் சோ்வைக்காரன்பட்டிையைச் சோ்ந்த முருகேசன் மகள் ராசாத்தி(24). இவருடைய கணவா் கணேசன்(30). கடவூா் அடுத்த திருமான்பட்டியில் வசிக்கும் இவா்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை பெற்றோரிடம் பேசிய ராசாத்தி நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளாா். சில மணி நேரத்தில் ராசாத்தி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து கணேசன் வீட்டுக்குச் சென்று பாா்த்த ராசாத்தியின் பெற்றோா், தனது மகள் சாவில் மா்மம் இருப்பதாக கூறி பாலவிடுதி போலீஸில் புகாா் செய்தனா்.இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து சடலத்தைமீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்நிலையில் புகாா் தொடா்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறி ராசாத்தியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் காந்திகிராமத்தில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல்அறிந்து வந்த நகர துணை காவல்கண்காணிப்பாளா் தேவராஜ் மற்றும் பசுபதிபாளையம் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.