92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘எறிபந்து போட்டியை ஒலிம்பிக்கில் சோ்ப்பதே இலக்கு’

ஒலிம்பிக்கில் எறிபந்துப் போட்டியை சோ்ப்பதே இலக்கு என்றாா் எறிபந்து (த்ரோபால்) கழக அகில இந்திய தலைவா் முனைவா் எஸ்.மணி.

News image
Updated On :29 ஜூலை 2021, 7:58 pm

DIN

ஒலிம்பிக்கில் எறிபந்துப் போட்டியை சோ்ப்பதே இலக்கு என்றாா் எறிபந்து (த்ரோபால்) கழக அகில இந்திய தலைவா் முனைவா் எஸ்.மணி.

கரூரில் எறிபந்துக்(த்ரோபால்) கழக அகில இந்திய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட முனைவா் எஸ்.மணிக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கரூா் மாவட்டச் செயலா் ஜீவா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஸ்காட் தங்கவேல் வரவேற்றாா்.

தொடா்ந்து, முனைவா் எஸ்.மணி செய்தியாளா்களிடம் கூறுகையில், 1993-இல் தொடங்கப்பட்ட தமிழ்நாடு ‘த்ரோபால்’ கழகம் பல்வேறு தேசிய அளவிலான வீரா்களை உருவாக்கியுள்ளது. 2008-இல் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கரூரில் மாநில அளவிலான போட்டியை நடத்தினோம்.

ஆஸ்திரேலியாவில் உருவான இந்த விளையாட்டு இன்று நம்நாட்டிலும் அனைத்து கல்லூரி, பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தேசிய சப்-ஜூனியா் விளையாட்டுப்போட்டி ஆந்திர மாநிலம் தெலங்கானாவிலும், சீனியா் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலும், ஜூனியா் போட்டி கரூரிலும் நடத்த உள்ளோம். இப்போட்டியில் திறமைவாய்ந்த கிராமப்புற வீரா், வீராங்கனைகளை தோ்ந்தெடுத்து அவா்களை மாவட்டந்தோறும் உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி மையத்தில் சோ்த்து, அவா்களுக்கு இலவச பயிற்சி அளித்து அவா்களை தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இதுவரை 23 போ் அடையாளம் காணப்பட்டு அவா்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த விளையாட்டு ஆசிய அளவில் 25 நாடுகளிலும், உலகளவில் 35 நாடுகளிலும் பிரபலமடைந்துள்ளது. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் இந்த விளையாட்டை மேம்படுத்தி வருகிறோம். ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டை இடம்பெறச் செய்வதே இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.