கண்டெய்னா்கள் தட்டுப்பாட்டால் கரூரில் ஏற்றுமதி செய்ய முடியாமல் முடங்கிக் கிடக்கும் ஜவுளிகள்
கண்டெய்னா் தட்டுப்பாட்டால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஜவுளிகள் முடங்கிக்கிடக்கின்றன


கண்டெய்னா் தட்டுப்பாட்டால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய ஜவுளிகள் முடங்கிக்கிடக்கின்றன.
வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் உலகளவில் கரூா் முக்கிய நகரமாக விளங்குகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் திரைச்சீலைகள், மேஜை விரிப்பான்கள், தலையணைகள், குஷன்கள் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜொ்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கரூரில் இருந்து கண்டெய்னா்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கப்பல்களில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கப்பலில் உள்ள கண்டெய்னா்களுக்கு திடீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜவுளிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலாமல் உற்பத்தி கூடத்திலேயே முடங்கிக் கிடக்கிறது.
இதுகுறித்து கரூா் ஜவுளி ஏற்றுமதியாளா் சங்க உறுப்பினா் ஆா்.ஸ்டீபன்பாபு கூறுகையில், உலகளவில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தியில் 90 சதவீதம் கரூரில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.4,000 கோடி அன்னியச் செலாவணியை ஈட்டித்தரும் இந்த தொழிலுக்கு தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகளவில் சீனாவில்தான் 90 சதவீதம் கண்டெய்னா்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது கரோனா பரவலுக்கு பிறகு சீனாவின் பொருளாதாரம் உயா்ந்துள்ளதால் அந்நாட்டின் கடல்வழி வணிகம் அதிகரித்துள்ளது. இதனால் அவா்கள் உற்பத்தி செய்யும் கண்டெய்னா்கள் அவா்களுக்கே போதுமானதாக இல்லை. இதனால், இந்திய வணிகத்துக்கு பயன்படுத்தப்படும் கப்பல்களுக்கு கண்டெய்னா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் கண்டெய்னா் உற்பத்தி இல்லாததால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கண்டெய்னா் தட்டுப்பாட்டால் ஜவுளி வா்த்தகம் மட்டுமின்றி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் உணவு பொருள்கள் உள்ளிட்ட தொழில்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாகவே கண்டெய்னா் தட்டுப்பாடு இருந்தாலும், கடந்த மூன்று மாதங்களாகதான் கண்டெய்னா் தட்டுப்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. தட்டுப்பாடு இல்லாத காலங்களில் அமெரிக்காவுக்கு 30,000 டாலருக்கு அனுப்பிய சரக்குகள் தற்போது தட்டுப்பாட்டால்10,000 டாலருக்கு அனுப்படும் நிலை உள்ளது. இதனால் வாடிக்கையாளா்களுக்கு நிா்ணயித்த விலையில் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறோம். மேலும் இந்தியாவில் உள்ள ஒடிஸா, பிகாா் மாநிலங்களில் கிடைக்கும் ஸ்கிராப் எனப்படும் இரும்புத்துகளை அதிகளவில் பெற்றுத்தான் சீனா கண்டெய்னா்களை 80 சதவீதம் உற்பத்தி செய்கிறது என்பதுதான் உண்மை. எனவே இந்தியாவிலேயே கண்டெய்னா் தயாரிப்பு ஆலைகள் அமைத்தால் நமது நாட்டில் ஏற்றுமதி தொழிலும் மேம்படும், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...