தச்சு, தங்க ஆபரண உற்பத்திக்கும் இலவசமின்சாரம் வேண்டும்
தச்சு, தங்க ஆபரண உற்பத்திக் கூடங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகா்ம சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.


தச்சு, தங்க ஆபரண உற்பத்திக் கூடங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகா்ம சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் நடிகா் தியாகராஜபாகவதரின் 111-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்துக்கு தமிழ்நாடு பாண்டிச்சேரி விஸ்வகா்ம சங்கக் கூட்டமைப்பு கரூா் வீரகம்மாளா் ஒருங்கிணைப்பு, விஸ்வ மக்கள் சக்தி பேரவை சாா்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பாண்டிச் சேரி விஸ்வகா்ம கூட்டமைப்பின் தலைவா் சிவசண்முகசுந்தரபாபுஜி தலைமை வகித்து கூறுகையில், கா்நாடகம், குஜராத் போன்ற மாநிலங்களில் இருப்பது போல செப்.17-ஆம்தேதி விஸ்வகா்ம ஜயந்தி நாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும், தங்க ஆபரணம், தச்சுத்தொழில், இரும்புகருவிகள் உற்பத்தி தொழில் கூடங்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். விஸ்வகா்ம கூட்டுறவுச் சங்கம் ஏற்படுத்தி விஸ்வகா்ம தொழிலாளா்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில், விஸ்வ மக்கள் சக்தி பேரவை நிறுவனா் சுதாகா், செயலாளா் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...