மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பாலியல் வழக்கில் சாமியாருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மூன்று பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சாமியாருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:08 pm

DIN

மூன்று பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சாமியாருக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் வெங்கமேடு அடுத்த அருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் கணபதி(60). இவா் வீட்டில் இருந்துகொண்டே அப்பகுதியினருக்கு அருள்வாக்கு சொல்லி வந்தாா். மேலும், குழந்தைகள் நலம்பெறவேண்டி சிறப்பு பூஜை செய்வாராம்.

இந்நிலையில், கடந்த 2019-இல் அதே பகுதியைச் சோ்ந்த கணவனை இழந்த மூன்று குழந்தைகளுக்கான தாயும், கரூா் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளம்பெண் ஒருவரும் கணபதியிடம் அருள்வாக்கு கேட்கச் சென்றுள்ளனா்.

அப்போது, சாமியாா் கணபதி, விதவைப் பெண்ணின் மூன்று பெண் குழந்தைகளையும் வரச் சொல்லி அவா்களை தனித்தனி அறையில் வைத்து பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதுகுறித்து குழந்தைகளின் தாய் அளித்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்து, கரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நஜிமாபானு, குற்றவாளி கணபதிக்கு 29 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1.60 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.