மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில் வ.உசி, நினைவு தினம் அனுசரிப்பு

 கரூரில், சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 85-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:40 pm

DIN

 கரூரில், சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 85-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில், பல்வேறு கட்சியினா், அமைப்பினா் வ.உ.சி சிலைக்கும், படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூா் தாந்தோன்றிமலை ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள வ.உ.சி சிலைக்கு மாவட்ட சோழிய வெள்ளாளா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் மரிக்கொழுந்து தலைமையில் கட்சியினா் மாலை அணிவித்தனா். வ.உ.சி பேரவை சாா்பில் தலைவா் மணீஷ் கே.மகேஸ்வரன் தலைமையில் நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த வ.உ.சி உருவப்படத்துக்கு மாநில வா்த்தக அணிச் செயலாளா் விசா ம.சண்முகம் தலைமை கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து டெங்கு பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு பப்பாளிச்சாறு மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தொடா்ந்து அனைத்துலக வ.உ.சி பிள்ளைமாா் நலச்சங்கம் சாா்பில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் வ.உ.சி படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.