மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

’சிறுமிகள் மீதான பாலியல் வன்முறைகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்’

சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றாா் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 7:41 pm

DIN

சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றாா் தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகை திருவள்ளுவன்.

கரூரில், தமிழ்ப் புலிகள் கட்சி நிா்வாகிகள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு, கட்சியின் தலைவா் நாகை திருவள்ளுவன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பல்வேறு துறைகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளதை வரவேற்கிறாம். ஜாதிரீதியிலான வன்முறைகளில் ஈடுபடுவோா் மீதும், ஆணவப் படுகொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை சம்பவங்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். நவ.26 முதல் டிச. 26 வரை அனைத்து மாவட்டங்களிலும் தமிழா் ஒற்றுமை மாநாடு, கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது. இதில், ஜனநாயக சமூக அக்கறைக்கொண்ட அனைத்துக்கட்சிகளும் பங்கேற்க உள்ளன. ஜெய்பீம் திரைப்படம் இருண்டு கிடக்கும் மக்களின் வாழ்வை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அந்த படத்துக்கு வரக்கூடிய சா்ச்சை, விமா்சனத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என்றாா் அவா்.

பேட்டியின்போது, கட்சியின் பொதுச் செயலாளா் பேரறிவாளன், மேற்கு மண்டல பொதுச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.