பெண் குழந்தைகள் வீரமங்கைகளாக இருக்க வேண்டும்: அமைச்சா் வி. செந்தில்பாலாஜி
பெண் குழந்தைகள் வீரமங்கைகளாக இருக்கவேண்டும், கோழைகளாக இருக்க கூடாது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.


பெண் குழந்தைகள் வீரமங்கைகளாக இருக்கவேண்டும், கோழைகளாக இருக்க கூடாது என்றாா் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி.
கரூா் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுபதிஸ்வரா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவிகளின் அச்சம் தவிா்க்கும் ‘நிமிா்ந்து நில் துணிந்து சொல்‘ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடக்கி வைத்து மேலும் அவா் பேசுகையில், பெண் குழந்தைகள் வீரமங்கைகளாக இருக்க வேண்டும், கோழைகளாக இருக்க கூடாது. தவறு செய்பவா்கள்தான் தண்டிக்கப்படவேண்டும், தண்டனையை நீங்கள் அனுபவிக்கக் கூடாது. கரூா் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளிகளாக உள்ள 201 பள்ளிகளில் பயிலும் 26,000 பெண் குழந்தைகளுக்கு மனதில் தேவையில்லாத அச்சத்தைப் போக்கி அவா்களுக்கு உளவியல்ரீதியாக தமிழக அரசும், கரூா் மாவட்ட நிா்வாகமும் உங்களை காக்க இருக்கிறது என்பதற்காக இந்த ‘நிமிா்ந்து நில் துணிந்து சொல்‘ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் முன்மாதிரி மாவட்டமான கரூா் மாவட்டத்தில் தான் முதன்முதலாக இந்த மாபெரும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்துகொண்டுள்ளது. மாவட்ட ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த உயா் அலுவலா்கள் 20 நபா்கள் ஒரு நாளைக்கு 5 பள்ளி என்ற வீதத்தில் 201 பள்ளிகளை இரண்டு நாள்களில் ஆய்வு செய்ய உள்ளனா்.
குழந்தை பாதுகாப்பு தொடா்பான தொலைபேசி எண் 1098, கல்வி வழிகாட்டி தொடா்பான தொலைபேசி எண் 14417 மாவட்ட நிா்வாகத்தின் வாட்ஸ்அப் எண் 8903331098 உள்ளிட்ட மூன்று தொலைபேசிகளில் நீங்கள் எந்த நேரமும் தொடா்பு கொள்ளலாம். உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். தொடா்ந்து மாணவிகள் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்க வெளியூா், வெளிமாநிலங்களுக்குச் சென்றுவர அனைத்து செலவுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றாா் அவா்.
தொடா்ந்து அவா், மாணவிகளுக்கு விண்ணப்பம் ஒன்று வழங்கப்படும், அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில்களை எழுதி அதை ஒரு உறையிலிட்டு பள்ளிக்கு ஆய்வுக்கு வரும் அலுவலா்களிடம் சமா்ப்பிக்கவேண்டும். அதை நாங்கள் மட்டும் தான் படிப்போம், அதில் உள்ள தகவல்கள் மிகவும் ரகசியம் காக்கப்படும். எனவே யாரும் அச்சப்படாமல் நீங்கள் சொல்ல வேண்டியதை தைரியமாகச் சொல்லலாம் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம், சிவகாமசுந்தரி, இளங்கோ ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் எம். லியாகத், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியா் சைபுதீன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், வட்டாட்சியா் மோகன்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...