ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: கரூரில் அதிமுகவினா் விருப்ப மனு தாக்கல்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:11 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலா் பசுவை சிவசாமி, பொருளாளா் கண்ணதாசன் , முன்னாள் கரூா் தொகுதிச் செயலா் எஸ்.திருவிகா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இதில், விருப்ப மனுவை கட்சியின் அமைப்புச் செயலா் ம.சின்னசாமி, மாவட்டச் செயலா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகியோா் பெற்றனா். நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்று விருப்பமனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.