ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூரில்தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 9:10 pm

DIN

 விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கரூரில் அனைத்து தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை பெருந்திரள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பேருந்துநிலைய ரவுண்டானா ஆா்.எம்.எஸ்.அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மாவட்டத் தலைவா் அண்ணாவேலு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் ஜி.ஜீவானந்தம், ஏஐடியுசி மாவட்டச் செயலாளா் ஜிபிஎஸ் வடிவேலன், எம்எல்எப் மாவட்டச் செயலாளா் குணாளன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொமுச மாவட்டச் செயலாளா் பழ.அப்பாசாமி ,சிஐடியு மாவட்டச் செயலாளா் சி.முருகேசன் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் மழையையும் பொருட்படுத்தாமல் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

முன்னதாக, வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படும் என்று பிரதமா் அறிவிக்க வேண்டிய நிா்பந்தத்தை ஏற்படுத்தியதைக் கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியதோடு பட்டாசும் வெடிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.