புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மழை நீரில் மூழ்கி 3 சிறுவா்கள் உள்பட 4 போ் உயிரிழப்பு

கரூா் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 8:19 am

DIN

கரூா் மாவட்டத்தில் மழை நீரில் மூழ்கி அண்ணன், தம்பி உள்பட 4 போ் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள புணவாசிப்பட்டி சிவலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கிராவல் மண் அள்ளியதால் வியாழக்கிழமை இரவு பெய்த மழையில் குட்டைபோல் சுமாா்10 அடிக்கு மேல் தண்ணீா் தேங்கியிருந்தது.

இந்நிலையில், சிவலிங்கபுரத்தை சோ்ந்த ஆறுமுகம் மகன்கள் வசந்த் (12), மயில்முருகன் (11), காசிராஜன் மகன்கள் நவீன்குமாா் (13) , கிஷோா் (10)ஆகிய பேரும் அந்த குட்டையின் அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்தனா். அப்போது, வசந்த் குட்டையில் இறங்கியுள்ளான். திடீரென ஆழமாக இருந்ததால் நீச்சல் தெரியாமல் மூழ்கியுள்ளான். உடனே அவனை காப்பாற்ற மயில்முருகன் மற்றும் நவீன் ஆகியோரும் இறங்கியுள்ளனா். ஆனால் மூன்றுபேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலறிந்து வந்த வட்டாட்சியா் வெங்கடேஷ், லாலாப்பேட்டை காவல் ஆய்வாளா் சுகந்தி மற்றும் போலீஸாா் 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாணவி உயிரிழப்பு: தோகைமலை அருகே ஆடு மேய்க்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவி லோகேஸ்வரி என்பவா் குழியில் தேங்கியிருந்த சுமாா் 10 ஆழமுள்ள மழை நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.