கல்குவாரி உரிமைாயளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
கல்குவாரி உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முகிலன் தலைமையில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் சண்முகம்


கல்குவாரி உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் முகிலன் தலைமையில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் சண்முகம் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் லியாகத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.
பின்னா், சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் முகிலன் செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த மாதம் கரூா் மாவட்டத்தில் தோகைமலை, வெள்ளியணை, காட்டுமுன்னூா் ஆகிய பகுதிகளில் 8 கிரானைட் மற்றும் கல்குவாரிகளுக்கு அனுமதி கோரி பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக்கூட்டம் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு நிறுவனத்தின் சாா்பில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடா்பான ஆவணங்களை சரிபாா்த்தபோது, அவா்கள் காற்று, நீா், ஒலி, மண் எடுத்து ஆய்வறிக்கையை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒமேகா என்ற நிறுவனத்தில் ஆய்வு செய்ததாக காட்டப்பட்டுள்ளது. ஆனால், ஒமேகா என்ற நிறுவனம் அந்த இடத்தில் இல்லை. இல்லாத நிறுவனத்தில் எப்படி ஆய்வு செய்தாா்கள் என தெரியவில்லை. இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட கல்குவாரி உரிமையாளா்களை கைது செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...