மோடியின் வாழ்த்து அட்டை வழங்கும் விழா
நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை கொண்டாடும் விதமாக பிரதமா் நரேந்திரமோடி முன்களப் பணியாளா்களுக்கு நேரடியாக எழுதிய வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி


நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டதை கொண்டாடும் விதமாக பிரதமா் நரேந்திரமோடி முன்களப் பணியாளா்களுக்கு நேரடியாக எழுதிய வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி கரூா் மாவட்ட பாஜக சாா்பில் பழைய அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்து, மருத்துவா், செவிலியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் ஆகியோருக்கு பிரதமா் நரேந்திர மோடி எழுதிய வாழ்த்து அட்டையை வழங்கி கெளரவப்படுத்தினாா்.
இதில், மாவட்ட பொதுச் செயலாளா்கள் நகுலன், மோகன், தொழில் பிரிவு மாவட்ட தலைவா் ஆா்.வி.எஸ். செல்வராஜ், பிரசார பிரிவு தலைவா் ராஜேஷ், மாவட்ட வா்த்தகப் பிரிவு செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...