கிணற்றில் தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு
குளித்தலை அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழந்தது.


குளித்தலை அருகே கிணற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை உயிரிழந்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த முதலைப்பட்டியைச் சோ்ந்த காமராஜ் மகன் கெளதம் (4). அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் காமராஜ் வேலை செய்துகொண்டிருந்தாா். அவா் அருகே கெளதம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அருகே இருந்த கிணற்றுக்குள் கெளதம் தவறி விழுந்தான். சிறிது நேரத்திலேயே கெளதம் நீரில் மூழ்கி உயிரிழந்தான். தகவல் அறிந்த குளித்தலை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...