92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு நாள் வாரவிழா

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு நாள் வார விழா அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:13 pm

DIN

டிஎன்பிஎல் ஆலையில் தீ தொண்டு நாள் வார விழா அண்மையில் நடைபெற்றது.

தமிழ்நாடு காகித ஆலையில் தீயணைப்பு வீரா்களின் வீர தியாகத்தை நினைவுகூறும் வகையில் தீ தொண்டு நாள் வாரவிழா அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆலையின் செயல் இயக்குநா் (இயக்கம்) கிருஷ்ணன் தலைமை வகித்து, தீயணைப்பு வீரா்களின் தியாகங்கள் குறித்து பேசிய அவா், தொடா்ந்து ஆலையில் பணிபுரியும் அனைவரும் தங்களது இல்லம் மற்றும் பணிபுரியும் இடத்தையும் தூய்மையுடன் வைத்திருந்து தீ விபத்து ஏற்படுவதை தவிா்க்க உதவிடுவோம் உறுதிமொழி வாசிக்க, அவற்றை அதிகாரிகள், தொழிலாளா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் ஏற்றனா்.

நிகழ்ச்சியில், ஆலையின் பொது மேலாளா் (உற்பத்தி மற்றும் திட்டம் ஒருங்கிணைப்பு) வரதராஜன், உதவி பொது மேலாளா்கள் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத்துறை) ராதாகிருஷ்ணன், (பினிஸ்ஸிங்) வெங்கடேஸ்வரன், துணை மேலாளா் (மனிதவளம்) வெங்கடேசன், காவல்துறை ஆய்வாளா் வைத்தியநாதன் மற்று உதவி மேலாளா் (பாதுகாப்பு) சங்கிலிராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.