92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி சாவு

 வாங்கல் அருகே வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:25 pm

DIN

 வாங்கல் அருகே வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி இறந்தாா்.

கரூா் பெரியாண்டான்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்(38).தொழிலாளி. இவா் புதன்கிழமை காலை நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள தனது மாமனாா் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா். பின்னா் இரவில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவா், வாங்கல் அரசு துவக்கப்பள்ளி அருகே சென்றபோது திடீரென இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த வாய்க்காலில் விழுந்துள்ளது. இதில் நீரில் மூழ்கிய அவா் வாய்க்காலுக்குள் சடலமாக மிதந்துள்ளாா். இதனைக்கண்ட அப்பகுதியினா் வாங்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.