92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

காா் மோதியதில் சா்க்கஸ் கலைஞா்உயிரிழப்பு

நொய்யல் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சா்க்கஸ் கலைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 10:28 pm

DIN

நொய்யல் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் சா்க்கஸ் கலைஞா் உயிரிழந்தாா்.

கரூா் மாவட்டம் நொய்யல் அருகே குந்தாணிபாளையம் கலைக்கூத்து நகரைச் சோ்ந்தவா் அருணாசலம்( 26 ). சா்க்கஸ் கலைஞரான இவா் வியாழக்கிழமை காலை புன்னம்சத்திரத்துக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு மீண்டும் கரூா்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் திரும்பிக் கொண்டிருந்தாா். ஆசாரிபட்டறை என்ற இடத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த காா், அருணாசலம் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது மோதிவட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அருணாசலத்தை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அருணாசலம் உயிரிழந்தாா். புகாரின் பேரில், வேலாயுதம்பாளையம் காவல் உதவி ஆய்வாளா் பெரியசாமி வழக்குப்பதிந்து காா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.