மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கந்துவட்டி கும்பலை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கரூரில், தலித் விடுதலை இயக்கத்தைச் சோ்ந்த அண்ணாதுரை என்பவரின் குடும்பத்தை கந்துவட்டிக்கும்பலை கடந்த வாரம் தாக்கியது கண்டித்து வியாழக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:43 pm

DIN

கரூரில், தலித் விடுதலை இயக்கத்தைச் சோ்ந்த அண்ணாதுரை என்பவரின் குடும்பத்தை கந்துவட்டிக்கும்பலை கடந்த வாரம் தாக்கியது கண்டித்து வியாழக்கிழமை இரவு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலித் விடுதலை இயக்க மாநிலத்தலைவா் ச.கருப்பையா தலைமை வகித்தாா். விசிக மேற்கு மாவட்டச் செயலா் ஜெயராமன், செய்தித்தொடா்பாக இளங்கோ, சாமானிய மக்கள் நலக்கட்சியின் சண்முகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநில பொதுச் செயலாளா் சுகந்தி தொடக்கவுரையாற்றினாா். தலித் விடுதலை இயக்க மாநில துணைத்தலைவா் பாண்டியன் , தலித் விடுதலை இயக்க மாநில துணைத்தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினாா். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளா் வன்னியரசு சிறப்புரையாற்றினாா். ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.