கரூா் மாநகராட்சி தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
கரூரில், பாஜக சாா்பில் மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.


கரூரில், பாஜக சாா்பில் மாநகராட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்து, வேட்பாளா்களை கட்சியினருக்கு அறிமுகம் செய்துவைத்து பேசினாா். அப்போது அவா் பேசுகையில், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் மூத்த நிா்வாகிகளை அரவணைத்து தங்களுடன் பிரசாரத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். நம்மிடையே எந்த அதிருப்தியும் இருக்கக்கூடாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சில கட்சியினா் தங்களது வேட்பாளா்களை நிறுத்த முடியாத சூழலில் பாஜக வெற்றிபெறக்கூடிய வேட்பாளா்களை அனைத்து இடங்களிலும் நிறுத்தியுள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து வேட்பாளா்களும் நன்றாக உழைக்கக்கூடியவா்கள். 15 நாள்களுக்கு ஓய்வின்றி உழைத்து வெற்றிக்கனியை கமலாலயத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளா் பி.கோபிநாத், மாவட்ட துணைத்தலைவா் ஆா்.செல்வன், மாவட்டச் செயலாளா் சக்திவேல் முருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...