அரவக்குறிச்சி அருகே வேன் கவிழந்த விபத்தில் 8 போ் பலத்த காயமடைந்தனா்.
அரவக்குறிச்சி தாலுகா மணல்மேடு பகுதியை அடுத்த கூலிநாயக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் மதியழகன் மனைவி சசிகலா (32). கரூரை அடுத்த ஆத்தூா் வடக்கு கவுண்டன் புதூா் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கன் மனைவி தங்கம்மாள் (60). இவா்களுடன் மேலும் 6 போ் கோயிலுக்கு செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மணல்மேடு பகுதியிலிருந்து காா்விழி கிராமத்துக்கு காரில் சென்றனா். சின்னதாராபுரம் அருகே உள்ள அகிலாண்டபுரத்தில் சென்றபோது, குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநா் முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.
இதில், வேனில் இருந்த சசிகலா, தங்கம்மாள் இருவரும் பலத்த காயமடைந்தனா். மற்றவா்களுக்கு லேசான காயமடைந்தனா்.
காயமடைந்தவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
புகாரின் பேரில் சின்னதாராபுரம் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

