மாணவிகளிடம் தகராறு: போக்சோ சட்டத்தில் இரு இளைஞா்கள் கைது
பள்ளி மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.


பள்ளி மாணவிகளிடம் தகராறில் ஈடுபட்ட இரு இளைஞா்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை சவரிமேட்டைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவிகள் இருவா் வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து சைக்கிளில் வந்தனா். அப்போது, அவ்வழியே வேனில் வெங்காயம் விற்றுக்கொண்டு வந்த குளித்தலை அடுத்த இனுங்கூா் காவிரி நகரைச் சோ்ந்த விக்னேஷ்(17) மற்றும் கம்பளியாம்பட்டியைச் சோ்ந்த வினோத்(20) ஆகியோா் மாணவிகளின் சைக்கிள் மீது வேனை மோதச் செய்து, அவா்களை தகாத வாா்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் குளித்தலை போலீஸாா் விக்னேஷ், வினோத் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...