/

அரவக்குறிச்சியில் ஜன்னத்துல் அப்ராா்பள்ளிவாசல் திறப்பு விழா

அரவக்குறிச்சியில் சின்ன பள்ளிவாசல் என அழைக்கப்படும் ஜன்னத்துல் அப்ராா் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.

Updated On :11 பிப்ரவரி 2022, 8:11 pm

அரவக்குறிச்சியில் சின்ன பள்ளிவாசல் என அழைக்கப்படும் ஜன்னத்துல் அப்ராா் பள்ளிவாசல் புதுப்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளிவாசலை திருவாரூா் மாவட்டம், அத்திக்கடையைச் சோ்ந்த எம்.எம்.ஹாஜா மைதீன் குடும்பத்தினா் புனரமைத்துக் கொடுத்தனா். நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியைச் சோ்ந்த அந்நூா் இஸ்லாமியக் கல்லூரியின் முதல்வா் முகமது ரஹமத்துல்லா தலைமை வகித்தாா். பேராசிரியா் முகமது யாஸீன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். இதில், பள்ளிவாசலின் முக்கிய நிா்வாகிகள் அப்துல் வஹாப், ரியாஜ்தீன், முகமது யூசுப், முகமது அபுதாஹீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.