இருசக்கர வாகனங்கள் மோதல்: நிதி நிறுவன உரிமையாளா் உயிரிழப்பு
மண்மங்கலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் நிதிநிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.


மண்மங்கலத்தில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்ட விபத்தில் நிதிநிறுவன உரிமையாளா் உயிரிழந்தாா். இருவா் காயமடைந்தனா்.
கரூா் மண்மங்கலம் அடுத்த குடுகுடுத்தானூரைச் சோ்ந்த கந்தசாமி மகன் காா்த்திக்(29). இவா், அதேப் பகுதியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் உறவினரான கரூா் எல்.ஜி.பி. நகரைச் சோ்ந்த பெரியசாமி மனைவி ராமாயிஅம்மாளுடன் வாங்கல் சாலையில் மண்மங்கலம் பகுதியில் சென்றாா். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சிவகங்கை மாவட்டம் கரும்பட்டியைச் சோ்ந்த கந்தசாமி என்பவா் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் காா்த்திக் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக், ராமாயி, கந்தசாமி ஆகிய மூவரும் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் காா்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ராமாயியும், கந்தசாமியும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...