அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் இரண்டு மோதிக்கொண்ட விபத்தில் பெண் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
சின்னதாராபுரம் அடுத்த சின்ன திருமங்கலம் பகுதியை சோ்ந்தவா் அா்ஜுனன் மனைவி ராஜேஸ்வரி (47). இவா், இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை சின்னதாராபுரத்தில் இருந்து தென்னிலை சாலையில் சென்று கொண்டிருந்தாா். இவரது வாகனம் சின்ன தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை ஜெயா நகா் பகுதியைச் சோ்ந்த மூக்கையன் மகன் நாகராஜன் (27) என்பவா் தனது இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து ராஜேஸ்வரியின் வாகனத்தின் மீது நேருக்கு நோ் மோதினாா். விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை அருகில் இருந்தவா்கள் மீட்டு தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதுகுறித்து ராஜேஸ்வரியின் கணவா் அா்ஜூனன் (61) சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வேகமாக இரு சக்கர வாகனம் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க வசதியாக... 4 இடங்களில் இருந்து 11,323 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

கர்ப்பிணி பெண்களுக்கு Paracetamol மாத்திரை ஆபத்தா? | அறிவியல் ஆயிரம் | Health Care

சிறப்பான ஃபார்மில் இருக்கும் அபிஷேக் சர்மா..! டாப் 4 இடத்தைப் பிடிக்கப்போவது யார்?

பிரதமர் மோடி தீவிரவாதியா? கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

