சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக அதிமுகவினா் சாலை மறியல் முயற்சி
கரூரில், சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக அதிமுகவினா் சாலை மறியலுக்கு முயன்றனா்.


கரூரில், சுயேச்சை வேட்பாளருக்கு எதிராக அதிமுகவினா் சாலை மறியலுக்கு முயன்றனா்.
கரூா் பசுபதிபாளையம் பகுதியில் மாநகராட்சிக்குள்பட்ட 12-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் கனிமொழி என்பவரும், தென்னை மர சின்னத்தில் சுயேச்சை வேட்பாளராக மஞ்சுளா பெரியசாமியும் போட்டியிடுகின்றனா்.
இந்நிலையில் பசுபதிபாளையம் குகைவழிப்பாதை அருகே அங்குள்ள வாக்குப்பதிவு மையத்தில் இருந்து சுமாா் 120 மீ. தொலைவில் தென்னை மரசின்னத்தில் போட்டியிடுவோா் பூத் ஏஜென்ட் பந்தலை சாலையில் அமைத்திருந்தனா். இதனைகண்ட அதிமுகவினா் சுயேச்சை வேட்பாளா் மற்றும் அவரது ஆதரவாளா்களிடம் அதிமுக மாவட்ட துணைச் செயலாளா் பசுவைசிவசாமி உள்ளிட்டோா் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த பசுபதிபாளையம் போலீஸாா் சுயேச்சை வேட்பாளரின் பந்தலை அகற்றினா். இதையடுத்து அதிமுகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...