புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வாக்குச்சாவடி மையங்களுக்கானபொருள்கள் அனுப்பி வைப்பு: கரூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருள்கள் அனுப்பி வைக்கும் பணியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:02 pm

DIN

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கு வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருள்கள் அனுப்பி வைக்கும் பணியை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் ஆய்வு செய்தாா்.

நகா்ப்புற உள்ளாட்சித்தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெறவுள்ளதை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தவுள்ள பொருள்கள் அந்ததந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாட்டு பணிகளை கரூா் மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: கரூா் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 8 பேரூராட்சிகளிலும் மொத்தம் 398 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கரோனா தொற்று பரவல் தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்ட 85 வகையான பொருள்கள் காவல்துறையினரின் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு மண்டல அலுவலா்களிடம் ஒப்படைக்கப்படும். தோ்தலில் பணியாற்றவுள்ள அலுவலா்களுக்கான மூன்றாம் கட்ட கணினிமுறை குலுக்கல் முடிவடைந்து, மூன்றாவது கட்ட பயிற்சி வகுப்புகள் முடிவடைந்த பின்னா் அவா்கள் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற வேண்டும் என்பதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, மாநகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் என்.பாலசுப்ரமணியன், மாநகராட்சி பொறியாளா் நக்கீரன், கரூா் வட்டாட்சியா் பன்னீா்செல்வம் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.