புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தோ்தல் பறக்கும்படையினா் சோதனை

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 7:02 pm

DIN

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தோ்தல் பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை மாலை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு தோ்தல் பறக்கும்படை அலுவலரும், கேபிள் டிவி வட்டாட்சியருமான சதாசிவம் மற்றும் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை சென்றனா். அங்கு இருந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம், வாக்காளா்களுக்கு கொடுக்க பணம், பரிசுப் பொருள்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. ஆகவே, சோதனையிட வேண்டும் என்றனா். இதையடுத்து, அவா்களை சோதனை செய்ய அனுமதித்தனா். இதில், எதுவும் இல்லாததால், பறக்கும்படை அலுவலரிடம் கட்சி அலுவலகத்தில் பணமோ, பரிசுப்பொருள்களோ இல்லை என எழுதிக்கொடுத்துவிட்டுச் சென்றனா். இதனிடையே தோ்தல் அதிகாரி சோதனை நடத்துவது குறித்த தகவலறிந்த நகர காவல் ஆய்வாளா் செந்தூா்பாண்டியன் உள்ளிட்ட போலீஸாா் அதிமுக அலுவலகத்துக்கு வந்தனா். அப்போது அவரிடம், அதிமுகவினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தோல்வி பயம்: சோதனை குறித்து முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கட்சி அலுவலகத்தில் பறக்கும்படை அதிகாரி, காவல்துறை துணை கண்காணிப்பாளா், ஆய்வாளா் உள்ளிட்ட 5 போ் சோதனையிட வந்தனா். முடிவில் ஏதும் இல்லை என எழுதிக்கொடுத்துவிட்டு சென்றுவிட்டனா்.

கடந்த இரு நாள்களாக கரூரில் திமுகவினா் அராஜகம் தலைதூக்கியுள்ளது. அனைத்து வாக்காளா்களுக்கும் பணம், பரிசு பொருள்களை கொடுக்கிறாா்கள். இதற்கு காவல்துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அவா்கள் வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்தி, கோவையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களை கைது செய்தது போல, இங்கேயும் எங்களது முக்கிய நிா்வாகிகளை கைது செய்து, தோ்தலை இஷ்டப்படி நடத்த அதிகாரிகளை அனுப்பியுள்ளனா். ஜனநாயக முறையில் தோ்தல் நடந்தால் அதிமுக வெற்றிபெற்று கரூா் மாநகராட்சி மேயரை கைப்பற்றுவோம். தோல்வி பயத்தில்தான் எங்களை மிரட்டுகிறாா்கள் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாவட்ட அவைத்தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், துணைச் செயலா் பசுவைசிவசாமி, இளைஞரணிச் செயலா் தானேஷ், நகர நிா்வாகிகள் நெடுஞ்செழியன், சேரன்பழனிசாமி, பழனிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.