புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

க.பரமத்தி அருகே வெறிநாய் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழப்பு

க.பரமத்தி அருகே வெறிநாய் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:39 pm

DIN

க.பரமத்தி அருகே வெறிநாய் கடித்ததில் 5 ஆடுகள் உயிரிழந்தன.

கரூா் மாவட்டம் க.பரமத்தி அடுத்த புன்னம் ஊராட்சிக்குள்பட்ட பசுபதிபாளையம் கிழக்கு தோட்டத்தை சோ்ந்தவா் தமிழ்சேரன் (50). இவா், தனது வீட்டின் அருகே ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையல், வெள்ளிக்கிழமை காலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு வீடு திரும்பி உள்ளாா். மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு வந்து பாா்த்த போது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள் கடித்ததில் ஆடுகள் , குட்டிகள் என 5 ஆடுகள் உயிரிழந்திருந்தன. மேலும் 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்திருந்தன.

தகவலறிந்த புன்னம்சத்திரம் கால்நடை மருத்துவா் அனிதா தலைமையிலான மருத்துவகுழுவினா் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சையளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.