க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் நிலங்களில் மண் வரப்பு அமைக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.53.37 கோடியில் நிலங்களில் மண் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.


க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.53.37 கோடியில் நிலங்களில் மண் வரப்பு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கரூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்திற்குள்பட்ட காரூடையாம்பாளையம் ஊராட்சி, குப்பம் ஊராட்சிப் பகுதியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
க.பரமத்தி ஒன்றியத்திற்குள்பட்ட காரூடையாம்பாளையம் ஊராட்சி, சூரியம்பாளையம் கிராமத்தில் சமூகப்பொறுப்புணா்வு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை பாா்வையிட்ட அவா், அங்கு ரூ.22.65 லட்சத்தில் புதிய கிராம ஊராட்சி அலுவலக கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்படும் மக்கள்நலத்திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதில், குறிப்பாக விளைநிலங்களில் கரைகளை பலப்படுத்தும் நோக்கில் மண்வரப்பு அமைத்து திடப்படுத்தும் பணி விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக உள்ளது. க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் இத்திட்டத்தின் மூலம் 3,410 விவசாயிகள் பயன்பெறும் வகையில், ரூ.53.37 கோடியில் நிலங்களில் மண் வரப்பு அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மந்திராச்சலம், செயற்பொறியாளா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...