புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

கரூரில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 8:05 pm

DIN

கரூரில், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளா் ஜெயராஜ் தலைமை வகித்தாா். கரூா் கல்வி மாவட்டச் செயலாளா் பிரான்சிஸ்டேனியல்ராஜா வரவேற்றாா். மாநிலச் செயலாளா் சகிலா கண்டன உரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் தமிழரசி நன்றி கூறினாா்.

தமிழகம் முழுவதும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு நடந்துவரும் நிலையில், கலந்தாய்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை சீரமைக்க வேண்டும், தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அராஜகபோக்கை கண்டித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஆசிரியா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.