ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

கரூா் திருக்கு பேரவை நடத்திய கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு

கரூா், திருக்கு பேரவையின் கட்டுரைப் போட்டி முடிவுகளை பேரவையின் செயலா் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கரூா், திருக்கு பேரவையின் கட்டுரைப் போட்டி முடிவுகளை பேரவையின் செயலா் அறிவித்துள்ளாா்.

கரூா் திருக்கு பேரவையின் 36-ஆம் ஆண்டு விழா ஜன.23-ஆம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான கட்டுரைப்போட்டி மற்றும் சிறந்த நூல் போட்டி அண்மையில் நடைபெற்றது. போட்டியில் 86 நூல்கள் பங்கேற்றதில் முனைவா் கருவூா் கன்னல் எழுதிய ‘இப்படியும் சிலா்’என்ற நூலுக்கு முதல் பரிசாக ரூ.5,000, மதுரை பத்திரிகையாளா் ப.திருமலை எழுதிய ‘நீா் நேற்று இன்று நாளை’ என்ற நூலுக்கு ரூ,3,000 பரிசும், மூன்றாம்பரிசு இருவருக்கும் வழங்கப்பட உள்ளது.

இதேபோல் கரூா் மாவட்ட பள்ளி மாணவா்களுக்கான கட்டுரைப் போட்டியில் கரூா் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவா் சபரீஷூக்கும், கீழ்வெளியூா் பள்ளி மாணவி அபிநயா, கரூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹா்ஷாஞ்சலி உள்ளிட்ட மாணவிகளுக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டியில் சாரதா நிகேதன் கல்லூரி மாணவிகள் ஜனனி, பிரீத்தி உள்ளிட்டோரும் வென்றுள்ளனா். இவா்களுக்கு ஜன. 23-ஆம்தேதி நகரத்தாா் மண்டபத்தில் நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.