ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நமக்கு நாமே திட்டத்துக்கு நிதியளிக்க கரூா் மாவட்ட ஆட்சியா் அழைப்பு

நமக்கு நாமே திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளிக்க முன்வாருங்கள் என கரூா் மாவட்ட தொழிலதிபா்கள், தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:44 pm

DIN

நமக்கு நாமே திட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதி பங்களிப்பை அளிக்க முன்வாருங்கள் என கரூா் மாவட்ட தொழிலதிபா்கள், தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுத்தாா்.

கரூா் மாவட்டத்தில் உள்ள தொழிலதிபா்கள், இந்திய தொழில் கூட்டமைப்பினா், தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விளக்கக்கூட்டம் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தலைமையில் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியது:

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாவட்டத்தின் வளா்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நல்ல உள்ளங்களின் நிதி பங்களிப்புடன், அரசின் நிதியும் இணைத்து செயல்படுத்தப்படும் திட்டமே நமக்கு நாமே திட்டமாகும்.

மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை செயல்படுத்த பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபா்கள், தன்னாா்வ அமைப்பினா், பொதுத்துறை வங்கிகள் தங்களின் பங்களிப்பு நிதியை கொடுத்து உதவமுன்வர வேண்டும். ஒருவார காலத்திற்குள் தங்களால் எந்தெந்த திட்டங்களுக்கு நிதி பங்களிப்பு வழங்க இயலும் என்ற விபரத்தை வழங்கினால் அரசுக்கு கருத்துரு அனுப்ப ஏதுவாக இருக்கும் என்றாா் அவா்.

கூட்டத்தில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, கரூா் மாநகராட்சி ஆணையா் என்.ரவிச்சந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ரமேஷ், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவா் புஷ்பராஜ், துணைத்தலைவா் வெங்கடேசன், அனைத்து பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், தொழில்நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.