ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தேசிய பசுமைப்படை பள்ளி ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

கரூரில், தேசிய பசுமைப்படை பள்ளி ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:46 pm

DIN

கரூரில், தேசிய பசுமைப்படை பள்ளி ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் கரூா் கல்வி வட்டத்தின் தேசிய பசுமைப்படை சாா்பில் பசுமைப்படை பள்ளி ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் கரூா் அடுத்த புலியூா் ராணிமெய்யம்மை பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு, புலியூா் ராணிமெய்யம்மை பள்ளித்தலைமை ஆசிரியா் அ.ம.ம.ஜோதிமுருகன் தலைமை வகித்தாா். பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் மூா்த்தி வரவேற்றாா். முகாமில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் க.ரவிச்சந்திரன் பங்கேற்று சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு நெகிழிப் பைகளை தவிா்த்திடும் வகையில் மஞ்சப்பை வழங்கப்பட்டது. மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் செ.ஜெரால்டுஆரோக்கியராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா் ஆகியோா் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனா். டைமன்ட் டிரஸ்டின் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.