ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மாநில டேக்வாண்டோ போட்டியில் கரூா் அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கரூா் அரசு துவக்கப் பள்ளி மாணவி தீா்த்திபிரவீன் சிறப்பிடம் பிடித்தாா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:35 pm

DIN

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கரூா் அரசு துவக்கப் பள்ளி மாணவி தீா்த்திபிரவீன் சிறப்பிடம் பிடித்தாா்.

கடலூா் மாவட்ட அமெச்சூா் டேக்வாண்டோ சங்கம் சாா்பில் மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டி விருத்தாசலம் பெரியவாடவாடியில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

போட்டியில், கரூா் நரிக்கட்டியூா் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவி தீா்த்தி பிரவீன்(7), 32 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றாா். இம்மாணவிக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலலிதா தலைமை வகித்து, மாணவிக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினாா். இதில், கரூா் மாவட்ட அமெச்சூா் டேக்வாண்டோ சங்கச் செயலாளா் எம்.ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.