குடியரசு தின கொண்டாட்டம்: கரூா் ஆட்சியா் ஆலோசனை
கரூரில் குடியரசு தினம் கொண்டாட்டம் குறித்து ஆலோசனைக்கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.


கரூரில் குடியரசு தினம் கொண்டாட்டம் குறித்து ஆலோசனைக்கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் பேசுகையில், ஜன.26-ல் கொண்டாடப்படும் குடியரசுதின விழாவை சிறப்பாக கொண்டாட அனைத்துத்துறை அலுவலா்களும் அவரவா்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை பராமரித்து சீா்செய்து வழங்கும் பணியை மாநகராட்சியினா் மேற்கொள்ள வேண்டும்.
தீ தடுப்பு வாகனம், அவரச ஊா்தி தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு வரும் சுதந்திர போராட்ட தியாகிகளை நல்ல முறையில் உபசரித்து அமரவைத்து கவனித்துக்கொள்ள வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூகவிலகலைக் கடைபிடித்து அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றி விழாவில் பங்கேற்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...